சமாதான காலஆரம்பப் பகுதியில் தலைவர் அவர்களின் நீண்டகால செயற்திட்டத்திற்கமைவாக தென்தமிழீழத்திற்கான விநியோகத்திட்டமும் மாற்றப்பட்டு அதற்கானஅறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் கடற்புலிகளுக்கும் சர்வதேச கடற்பரப்பிலிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
அதற்கமைவாக இதுவரை காலமும் ஆழ்கடல் விநியோகம் ஒருபகுதியாக செயற்பட்டுக் கொண்டிருந்தது .ஆனால் இம்முறை அதாவது தென்தமிழீழவிநியேகத்திற்காக இரண்டு கப்பல்களும் பயண்படுத்தப்பட்டன. இரண்டு பிரிவுகளாக இடம்பெறுவதற்கான அனைத்துப் பணிகளிலும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் அணிகள் பிரிக்கப்பட்டு தென்தமிழீழத்திற்க்கு அனுப்பப்பட்டன.ஆனால் இவ் ஆழ்கடல் விநியோகம் முற்றிலும் மாறுபட்டது முதலாவதாக றோலர் கொள்வனவு செய்யப்பட்டு அவ்றோலரில் கப்பல்சென்று பொருட்களை நேரடியாக தென்தமிழீழத்தில் இறக்குவது .இரண்டாவதாக இவ்விநியோகம் முற்றிலும் கடற்கரும்புலிகளை உள்ளடக்கியதாகும்.றோலரில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருக்கும்.கடற்படையினர் சோதனை செய்யமுற்பட்டால் அல்லது மறித்தால் நிலைமையைப் பார்த்து அவ்றோலருடன் விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் கடற்கரும்புலிகள் றோலரைத் தகர்த்து தாமும் வீரச்சாவடைவார்கள்.அந்தவகையில் நீண்டகாலமாக இவ் தென்தமிழீழ விநியோக நடவடிக்கையில் திறம்பட செயற்பட்ட கடற்கரும்புலிகள் கப்பலுக்குச் சென்று பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும்போது சீரற்ற காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக வரும் நாளுக்குத் தாமதமாக இரண்டு நாட்கள் தாமதித்து வந்ததாலும் இவர்கள் வந்த நாள் மேதினம் என்பதால் கடலில் எந்த மீன்பிடிப் படகுகளும் இல்லாததால் இவர்களின் றோலரை சோதனை செய்ய முற்பட்ட கடற்படையினருடன் தங்களது இயந்திரம் பழுதடைந்ததால் வருவதற்க்கு பிந்தி விட்டது என கதைத்துக் கொண்டிருந்தனர் .அந்தக் காலப்பகுதி சமாதானம் என்பதால் இவர்கள் தங்களது கட்டளைமையத்திற்க்கும் தகவல்களை அறிவித்திருந்தார்கள்.இருந்தும் கடற்படையினர் இவர்களை திருகோணமலைத் துறைமுகத்திற்க்குவருமாறு அறிவுறுத்தி அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது எதிரியிடம் பிடிபடக்கூடாதென்பதற்காகவும் இரகசியத்தைக் காப்பதற்காகவும் தங்களது ரோலரை வெடிக்கவைத்து தென்தமிழீழக்கடலில் 01.05.2002 அன்று ஒரு புதிய வரலாற்றைப் பதித்துச் சென்றார்கள்.இச் சம்பவத்தில் …கடற்கரும்புலி மேஐர் வசந்தன்.கடற்கரும்புலி மேஐர் சூரிகடற்கரும்புலி மேஐர் அச்சுதன்கடற்கரும்புலி மேஐர் பாண்டியன்ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.